Monday, September 24, 2007

மந்திர ஊச்சாடனம்

ஒரு சில மந்திரங்களை தியானிப்பதற்கு என்று குறிப்பிட்ட நேரங்க்கள் உண்டு என்கிறார்கள்? எந்த மந்திரத்தை எந்த நேரத்தில் திய்யானிக்க வேண்டும் என்று சொல்வீர்களா?

இது மிகப்பெரிய விஷயம். அதிலும் மந்திரங்கள் சப்த வடிவிலானவை. சப்தங்களோ மாத்திரை அளவிலானவை. ஒரு மந்திரச்சொல்லை எப்படி உச்சர்ரிக்க வேண்டும் என்று மட்டுமல்ல, எப்பொழுது என்பதும் முக்கியமான பங்கு வகிக்கிறது. தேர்ந்த குருவ்வின் துணை கொண்டு அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது. கந்தர் சஷ்டி கவசம், பிரபந்தங்கள், அபிராமி அந்தாதி, ச்இவபுராணம் போன்றவைகளை எப்பொழுஹ்டு பாராயணம் செய்யலாம். இருப்பினும், காலை வேளை மிகவும் உகந்தது. அதே பொல லக்ஷ்மி விஜயம் நிகழும் மாலை வேளை பஜனை மற்றும் பாராயண ஸ்லோகங்களை உச்சரிக்க ஏற்ற நேரம்.

1 comment:

ஜீவி said...

இது பற்றி முக்கிய செய்திகள் சொல்ல வேண்டும்.
1. மந்திரங்கள் அவை எந்த மொழியில் இருந்தாலும், உச்சரிப்பு--
அதன் மூலம் பரவும் சப்த அலை
முக்கியம். அந்த சப்த அலையை
மூலமாகக் கொண்டு தான் "மந்திர
வார்த்தைகளை" அதை யாத்தவர்கள் அமைத்திருக்கிறார்கள். அதாவது அந்த நேரத்து பரவும் ஒலியில்(சப்தம்)
தான் விஷயமே இருக்கிறது.
2. வெறும் வார்த்தைக்கோர்வைகள்
வழிபாடுகளுக்கு துணைசெய்யும்.
ஆனால், மந்திரங்கள் என்பவை இதிலிருந்து வேறுபட்டவை.
3. மந்திரங்கள் மறைபொருளை உள்ளட்க்கியவை.
"நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த
மறைமொழி தானே மந்திரம் என்பர்."
-தொல்காப்பியர்