Monday, September 24, 2007

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி சமயத்தில் கிரக சஞ்சாரம் உள்ளவர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்லலாம் என்பதும் சரியா?

இப்படி கேட்பதே தவறு. ஆலயத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். பெயர்ச்சி சமயங்களில் ஆலயவழிபாடு செய்வது என்பது எல்லா ராசிக்கார் களுக்குமே நன்மையை தரும் ஒரு விஷயம்தான்.

கூட்டத்தை குறைக்க யாரேனும் உங்களிடம் இப்பட்டி தந்திரமாக கூறியிருக்கலாம்.

சகுனம் பார்ப்பது

ராசி பலன் பார்த்துவிட்டு வெளியே புரப்படுவது தவறா?

ஒரு வகையில் தவறுதான். என்னடா ஜோதிட நம்பிக்கை உள்ள நானே இப்படி கூறூகிறேனே என்று தோன்றலாம். காரணம் உள்ளது. இன்றைய ராசி பலன்களை யாரும் பெரிதாக கணக்கிட்டு கூட்டிக்கழித்துவிடுதல் இல்லாமல் கூறுவதில்லை என்பது என் கருத்து. அப்ப்டி கூற வேண்டுமானால் எவ்வளவு கால நேரம் செலவாகும் என்பது எனக்குத் தெஇர்யும். அப்படியானால் நினைத்த பலன்களை இஷ்டத்திற்கு எழுதிவிடுகிறார்களா? அப்படியும் பொருளல்ல. பெரும்பாலும் மிக மிக பொதுவான பலனைத்தான் கூற முடொஇயும் அந்த பலன் ஒரு குறிப்பிட்ட ராசிக்காரருக்கு அவர்களுக்குள்ளேயே தசாபுக்தி, அந்தரம் போன்ற மற்ற காரணிகளால் கூடிக்குறையக்கூடியது.எனவே தினசரி நாள் பலனை ஒரு பொருட்டாக கருதுவது சரியல்ல. அதை சாதாரண செய்தியாக எடுத்துக்கொள்ளலாம்.

மந்திர ஊச்சாடனம்

ஒரு சில மந்திரங்களை தியானிப்பதற்கு என்று குறிப்பிட்ட நேரங்க்கள் உண்டு என்கிறார்கள்? எந்த மந்திரத்தை எந்த நேரத்தில் திய்யானிக்க வேண்டும் என்று சொல்வீர்களா?

இது மிகப்பெரிய விஷயம். அதிலும் மந்திரங்கள் சப்த வடிவிலானவை. சப்தங்களோ மாத்திரை அளவிலானவை. ஒரு மந்திரச்சொல்லை எப்படி உச்சர்ரிக்க வேண்டும் என்று மட்டுமல்ல, எப்பொழுது என்பதும் முக்கியமான பங்கு வகிக்கிறது. தேர்ந்த குருவ்வின் துணை கொண்டு அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது. கந்தர் சஷ்டி கவசம், பிரபந்தங்கள், அபிராமி அந்தாதி, ச்இவபுராணம் போன்றவைகளை எப்பொழுஹ்டு பாராயணம் செய்யலாம். இருப்பினும், காலை வேளை மிகவும் உகந்தது. அதே பொல லக்ஷ்மி விஜயம் நிகழும் மாலை வேளை பஜனை மற்றும் பாராயண ஸ்லோகங்களை உச்சரிக்க ஏற்ற நேரம்.