Monday, November 26, 2007

சிவ மயம்

சிவ வழி பாட்டில் மந்திர வழிபாடும் தனிச்சிறப்பு கொண்டது. 63 நாயன்மார்களில் ருத்ர பசுபதி நாயனார் என்பவர் நாள் தவறாமல் ருத்ரம் உச்சரித்தவர். ருத்திரன் என்ற சொல்லுக்கு துன்ப விடுதலை தருபவன் என்பதே பொருளாகும். எனவே பசுபதி நாயனாருக்கு அவர் உச்சரித்த ருத்ரமே நல்வழி காட்டி அருளியது. அதனாலேயே அவரை ருத்ரபசுபதி நாயனார் என்று இன்றும் உலகம் கொண்டாடுகிறது.

ருத்ரத்தை ஒரு முறை உச்சரிப்பது என்பது சிவாலயத்தை ஒருமுறை வலம் வந்து வணங்கும் சிறப்புக்கு உரியது. அதையே 108 முறை உச்சரிப்பது சிவாலயங்கள் அவ்வளவிற்கும் சென்ற சிறப்பினை தரும். 1008 முறை உச்சரிப்பது என்பது ஜெபித்தவர்களுக்கு அவர் எடுக்கும் பிறவி தோறும் காரிய சித்தியை தரும். 10,008 முறை உச்சரித்தவரோ மோட்ச கதி எய்துவர் என்கிறது சிவ புராணம்.

No comments: